Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருங்கை டீ செய்வது எப்படி? என்னென்ன பயன்??

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (09:52 IST)
முருங்கை டீ முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி, அரைத்த பொடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 

 
முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, விதை, பட்டை, வேர், பிசின், மலர் என அத்தனையும் மருந்தாகப் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக, முருங்கை இலைகளில் க்ளோரோஜெனிக் ஆசிட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. 
 
முருங்கை டீ செய்முறை: 
முருங்கை இலையை நிழலிலேயே உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரைக் கொதிக்க வைத்து வடிகட்டினால் நல்ல பச்சை நிறத்தில் டீ கிடைக்கும். உங்களுக்குக் கூடுதல் சுவை தேவைப்பட்டால் சிறிது தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
 
முருங்கை இலை நன்மைகள்: 
முருங்கை இலையில் செறிந்துள்ள விட்டமின் சி, டைப் -2 வகை நீரிழிவு நோயளிகளின் இரத்த சர்க்கரையையும் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. 
 
முருங்கைக்கீரை உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதால் இதய நோய்களின் ஆபத்தைக் குறைத்து இதய நோயாளிகளுக்கும் உதவுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக ஊளைச்சதையாலும் தொங்குகின்ற தொப்பையாலும் தொடைப்பகுதியில் இருக்கும் செல்லுலாய்டு  கொழுப்புத் திசுக்களையும் குறைக்க உதவுகிறது.
 
முருங்கை இலையில் இருக்கும் அதிக அளவிலான சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜன் அழுத்தத்தை எதிர்த்து போராடி உங்கள் சருமம் மற்றும் கூந்தலின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நச்சுக்களை தடுத்து சருமத்தை ஆழமாக சுத்தம்  செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments