உதடுகள் உலர்ந்து விடுவது என்பது ஒரு சிலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் அதை எப்படி தவிர்ப்பது என்பதை தற்போது பார்ப்போம்.
வெயில் காலங்களில் பலருக்கு உதடுகள் உலர்ந்து விடுவது ஒரு குறையாகவே காணப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
உதடுகள் உலர்வதை தவிர்க்க சிலர் செயற்கையான ஜெல்களை பூசி விடுவார்கள். அதற்கு பதிலாக இயற்கை முறைகளை கடைபிடிக்கலாம்.
குறிப்பாக ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து உதடுகளில் தடவி வந்தால் நாளடைவில் உதடு உலர்வது நின்றுவிடும்.
அதேபோல் எலுமிச்சை பழச்சாறு இலவங்கப்பட்டை தூள் கலந்து உதடுகளில் பூசி வந்தாலும் உதடுகள் உலர்வதற்கு தீர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது