ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் குறைவாக தண்ணீர் கொடுத்தால் பல்வேறு பிரச்சனைகள் உடலுக்கு ஏற்படும் என்றும் கூறப்படுவது உண்டு. ஆனால் அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தாலும் சில பிரச்சனைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஹைபோநெட்ரீமியா என்ற பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும் என்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தால் நீங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஹைபோநெட்ரீமியாஎன்ற பிரச்சனை ஏற்படும் என்றும் இதனால் ரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருக்கும் அறிகுறி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் எலக்ட்ரோலைட் அளவு குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தண்ணீரின் அளவை எப்போதும் சரியாக குடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.