கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் எலும்புகள் உறுதியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
பால், தயிர், முட்டை, மீன், கீரைகள், ஆகியவற்றில் கால்சியம் அதிகம் இருக்கிறது. இதை சாப்பிடுவதால் எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உத்தரவாதம் உண்டு.
அதேபோல் பாலக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி கீரை, சோயா பீன்ஸ், பட்டர் பீன்ஸ், முட்டைக்கோஸ், அவரக்காய், முருங்கைக்காய், காலிபிளவர், அத்திப்பழம், மாதுளம் பழம், சோளம், முந்திரி பருப்பு, பிஸ்தா, பாதாம் ஆகியவற்றையும் ரெகுலராக எடுத்துக் கொள்ள வேண்டும்
மேற்கண்ட உணவுகளை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் எலும்புகள் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது