உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் 8 எளிய தினசரி பழக்கங்கள் குறித்து, ஹார்வர்டு மருத்துவமனையில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் மருத்துவர் சௌரவ் சேதி அறிவுறுத்தியுள்ளார். வயிறு தான் உடலின் 'இரண்டாவது மூளை' என்றும், அதைச் சரியாகப் பராமரிப்பதே ஒட்டுமொத்த உடல்நலனுக்கும் அடிப்படை என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
தினசரி பழக்கங்கள்:
சூடான நீரில் தொடக்கம்: நீரிழப்பை சரிசெய்ய, காலையில் எலுமிச்சை சாறுடன் வெதுவெதுப்பான நீர் அருந்தவும்.
காலை காபி/டீ தவிர்ப்பு: வெறும் வயிற்றில் காபி/தேநீர் அருந்துவதைத் தவிர்க்கவும்.
லேசான அசைவுகள்: 10-15 நிமிடங்களுக்கு நடைபயிற்சி அல்லது எளிய அசைவுகளைச் செய்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும்.
நார்ச்சத்து உணவு: காலை உணவில் ஓட்ஸ், பழங்கள் போன்ற நார்ச்சத்து உணவுகளைச் சேர்க்கவும்.
புரதம் அவசியம்: மதிய உணவில் தயிர், முட்டை, பருப்புகள் போன்ற புரதம் மற்றும் நார்ச்சத்து உணவுகளைச் சேர்த்து செரிமானத்தைப் பலப்படுத்தவும்.
சாப்பிடும்போது அலைபேசி வேண்டாம்: இது செரிமான சக்தியைக் குறைக்கும்.
மாலையில் இஞ்சி/எலுமிச்சை சாறு: மாலை நேரத்தில் விட்டமின் சி நிறைந்த வெதுவெதுப்பான இஞ்சித் தேநீர் அல்லது எலுமிச்சை சாறு அருந்தலாம்.
சூரிய ஒளி: 10-15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பதால் வைட்டமின் டி கிடைக்கும்.
இவை பொதுவான ஆலோசனைகள்; மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.