Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

1500 கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் இந்தியாவின் மிகப்பெரிய விழித்திரை கருத்தரங்கு: ரெட்டிகான் 2024!

reticon 2024

Prasanth Karthick

, திங்கள், 8 ஏப்ரல் 2024 (10:45 IST)
இந்தியாவின் தொழில்துறையின் பங்களிப்புகள் மீதான அறிவார்ந்த தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுத்திருக்கும் இந்நிகழ்வில், விழித்திரை அறுவைசிகிச்சை தொடர்பாக நிகழ்ந்திருக்கும் மிக சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த செயல்முறை விளக்கங்களும் இடம்பெற்றன.


 

 

சென்னை: ஏப்ரல் 07, 2024:  டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விழித்திரை துறையால் நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர கருத்தரங்குகளுள் ஒன்றாக புகழ்பெற்றிருக்கும் ரெட்டிகான் 2024 இன்று நடைபெற்றது.  14-வது பதிப்பாக நடைபெற்ற இந்நிகழ்வு, இந்தியாவில் பார்வையின்மைக்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் விழித்திரை கோளாறுகளை சரிசெய்ய மிக நவீன உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறையியல்கள் குறித்து விவாதித்தது மற்றும் சிறப்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுத்தது.  மிக ஆவலோடு ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வான இக்கருத்தரங்கு. இந்தியாவிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் விழித்திரை சிறப்பு நிபுணர்கள் மற்றும் கண் மருத்துவர்கள் உட்பட, 1500 நபர்களின் பங்கேற்பை இந்த ஆண்டு பெற்றிருக்கிறது.

 

மொரீஷியஸ் குடியரசின் கெளரவத் தூதர் மாண்புமிகு திரு.மலையப்பன் நாகலிங்கம் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விட்ரியோ – ரெட்டினல் அறுவைசிகிச்சை நிபுணர் & தலைமை வணிக அதிகாரி  டாக்டர். அஸார் அகர்வால் - ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநர் டாக்டர். ஜே.சங்குமணி இக்கருத்தரங்கு நிகழ்வை தொடங்கி வைத்தார்.

 

டெல்லியில் உள்ள பார்வைக்கான மையத்தின் உள்ள விட்ரியோ-ரெட்டினா சேவைகளின் இயக்குநரும், அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் லலித் வர்மா இக்கருத்தரங்கில் சிறப்புரை வழங்கினார். “இந்தியாவில் விழித்திரை அறுவை சிகிச்சையில் முன்னோடி” என அழைக்கப்படும் பேராசிரியர் டாக்டர் எஸ்.நடராஜன், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவர்  - மருத்துவ சேவைகள், சென்னை  & மருத்துவ இயக்குநர் மற்றும் தலைவர்-விட்ரியோ-ரெட்டினல் அறுவை சிகிச்சைதுறை  டாக்டர். சௌந்தரி எஸ். மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் முதுநிலை சிறப்பு நிபுணர் டாக்டர் பர்வீன் சென் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றியவர்களுடன் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

2011 – ம் ஆண்டு முதல், நடைபெற்று வரும் ரெட்டிகான் நிகழ்வு, பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால் மற்றும் டாக்டர் அஷ்வின் அகர்வால் ஆகியோரின் மகத்தான முயற்சிகளின் காரணமாக, இந்தியாவில் விழித்திரை அறுவை சிகிச்சை தொடர்பான மிகவும் மதிப்புமிக்க கருத்தரங்கு நிகழ்வுகளில் ஒன்றாக கௌரவம் பெற்றிருக்கிறது. கண்ணின் முன்புற பிரிவு மற்றும் கண்புரை பாதிப்பு பற்றி பெருமளவு விவாதங்களை மேற்கொள்ளும் வழக்கமான கருத்தரங்குகளுக்கு மாறாக, விழித்திரை அறுவைசிகிச்சையில் நிகழ்ந்திருக்கும் சமீபத்திய மேம்பாடுகள் பற்றி எடுத்துக்கூறி செய்முறை விளக்கத்தையும் வழங்குவது மீது ரெட்டிகான் கூர்நோக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய உத்திகள் குறித்து அறிவு பரிமாற்றத்தை ஏதுவாக்கிய நிகழ்வாக இக்கருத்தரங்கு அமைந்தது.

 

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் விட்ரியோ – ரெட்டினல் அறுவைசிகிச்சை நிபுணர் & தலைமை வணிக அதிகாரி  டாக்டர். அஸார் அகர்வால் தனது உரையில் கூறியதாவது: “உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிப்பதால், விட்ரியோரெட்டினல் எனப்படும் விழித்திரை கோளாறுகள், கண்பார்வை ஆரோக்கியத்திற்கு மிகக்கடுமையான சவால்களை முன்வைக்கின்றன. இத்துறையில் செயல்படும் வல்லுநர்களையும் மற்றும் மருத்துவ நிபுணர்களையும்  ஓரிடத்தில் ரெட்டிகான் கருத்தரங்கு ஒன்றிணைக்கிறது. இந்த நோய்களை கண்டறிவதிலும், சிகிச்சையளிப்பதிலும் புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வது, அறிவுப் பரிமாற்றம் செய்வது மற்றும்  சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது என்ற நோக்கங்களுக்காக ஒரு உகந்த சூழலை இந்நிகழ்வு உருவாக்கி இதை மிகவும் பயனுள்ளதாக மாற்றுகிறது.  விழித்திரை மருத்துவம் மற்றும் விழித்திரை அறுவைசிகிச்சைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தும் அமர்வுகளைக் கொண்ட ரெட்டிகான், அதிநவீன நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்த கருத்தரங்கு அனுபவமிக்க கண் மருத்துவர்களுக்கு மட்டுமல்ல. விட்ரோரெட்டினல் நோயறிதல் மற்றும் சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டுள்ள முதுகலை பட்டதாரிகளுக்கும் ஒரு முக்கியமான, சிறந்த அறிவுத்தளமாக செயல்படுகிறது. மேலும், விழித்திரை நோயாளிகளுக்கு நம்பிக்கை வழங்கும் கலங்கரை விளக்கமாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்துவதற்கும், பார்வையை மீட்டெடுப்பதற்கும் கண் மருத்துவ நிபுணர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இந்நிகழ்வு அந்நோயாளிகளுக்கு உறுதிசெய்கிறது.”


விட்ரோரெட்டினல் நோய்கள் என்பவை, கண்ணின் பின்புறத்தில் உள்ள ஒளி-உணர்திறன் அடுக்கு மற்றும் கண்ணின் முன்புறத்தில் உள்ள லென்ஸுக்கும் விழித்திரைக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்பும் தெளிவான ஜெல் எனப்படும் விட்ரஸ் மற்றும் விழித்திரை ஆகியவற்றைப் பாதிக்கும் கோளாறுகளாகும். விட்ரியோ ரெட்டினல் கோளாறுகளுள் சிலவாக, நீரிழிவினால் ஏற்படும் ஒரு சிக்கலான விழித்திரை அழிவுநோய் மற்றும் அதன் உயிரணுக்களின் இறப்பு காரணமாக ஏற்படும் விழித்திரை சிதைவு; விழித்திரையின் மிகவும் உணர்திறன் வாய்ந்த பகுதியான விழிப்புள்ளியின் உயிரணுக்கள் சிதைவடையும் ஒரு நிலையான விழிப்புள்ளி சிதைவு;  விழிப்புள்ளியில் துளை, கண்ணின் பின்பகுதியிலிருந்து விழித்திரை கிழிந்து, தள்ளி இழுக்கப்படும் ஒரு பாதிப்பான விழித்திரை கிழிதல் ஆகியவை அறியப்படுகின்றன.


மிதவைகள் (ஃபுளோட்டர்ஸ்), கண்ணில் மின்னல் போன்ற திடீர் ஒளி மற்றும் திடீரென பார்வை மங்குவது  ஆகிய அறிகுறிகள் உங்கள் கண்ணில் விழித்திரை சார்ந்த பிரச்சனை இருக்கிறது என்பதை வலுவாக சுட்டிக்காட்டும் மிகப்பொதுவான அறிகுறிகளாகும். விழித்திரை கோளாறை சரிசெய்வது மிகவும் சவாலானது; அதற்கு சிறந்த திறனும், துல்லியமும், நவீன தொழில்நுட்பமும் அவசியமாகும். அதிநவீன இன்ட்ராவிட்ரியல் ஊசிகள், லேசர் பயன்பாடு முதல் விழிப்படிக திரவநீக்கல் வரை பல்வேறு சிகிச்சை வழிமுறைகளுள் எதை பயன்படுத்துவது என்பதை விழித்திரை மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர்கள் முழுமையான ஆய்விற்குப் பிறகு முடிவு செய்வார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலாப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?