ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ஆம் தேதி குறைபிரசவ விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் குறை பிரசவம் குறித்து தற்போது பார்ப்போம்.
ஒரு குழந்தை தாயின் கருவில் 10 மாதங்கள் இருக்க வேண்டும் என்பதும் அப்போதுதான் அந்த குழந்தை முழுமையான வளர்ச்சி அடையும் என்றும் கூறப்படுகிறது
ஆனால் 34 முதல் 37 வாரங்கள் வரை குழந்தை தாயின் கருவில் இல்லாமல் அதற்கு முன்பே பிறக்கும் குழந்தைகள்தான் குறைபிரசவம் என்றும் குறை பிரசவத்தால் குழந்தைகளின் உள் உறுப்புகள் அதிக அளவு பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்
உலகில் ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறப்பதாகவும் புள்ளிவிவரம் ஒன்று கூறுகின்றது. கருவில் ஒரு குழந்தைக்கு மேல் உருவாகுதல், செயற்கை கருத்தரிப்பு, கர்ப்பிணிக்கு கர்ப்ப காலத்தில் இரத்த சோகை நோய் இருப்பது உள்பட ஒருசில காரணங்களாக குறைப்பிரசவத்திற்கு கூறப்படுகின்றன
இந்த நிலையில் குறைப்பிரசவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதியை குறைப்பிரசவம் விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் குறைபிரசவம் விழிப்புணர்வு தினத்தில் குறைப்பிரசவம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு மருத்துவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது