வெள்ளை சர்க்கரை என்பது உடலுக்கு தீங்கிழைக்கக் கூடியது என்று அனைவரும் கூறிவரும் நிலையில் பனங்கற்கண்டு சேர்த்தால் உடலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது.
பாலில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் மார்பு சளி இளகி வெளியேறும் என்றும் இருதய நோயை குணமாகும் என்றும் கூறப்படுகிறது. பனங்கற்கண்டில் சுண்ணாம்பு சத்து அதிகம் இருக்கிறது என்றும் இரும்பு புரதச்சத்துக்கள் வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது
அனைத்து விதமான நோயும் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. இருதய நோய் குணமாகும் என்றும் இதில் உள்ள கால்சியம் பற்களை உறுதிப்படுத்தும் என்றும் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படுவதை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கண் நோய் ஜலதோஷம் காச நோய் ஆகியவையும் பனங்கற்கண்டு நீக்குகிறது. சிறந்த ஆயுர்வேத மருந்தாக கூறப்படும் பனங்கற்கண்டை அனைத்து விதமான பானங்களிலும் கலந்து பருகி பயன்பெற வலியுறுத்தப்படுகிறது.