தற்காலத்தில் பலரும், குறிப்பாக பெண்கள், முழங்கால் மூட்டுத் தேய்மானம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதத்தின்படி, மூட்டுகளில் உராயும் தன்மையை தவிர்க்க, வழுவழுப்பை ஏற்படுத்தும் உணவுகளை உட்கொள்வதும், வெளிப்புறமாக நல்லெண்ணெய் போன்ற நெய்ப்பைத் தடவி வருவதும் அவசியம்.
உளுந்து, எள்ளு, நல்லெண்ணெய், நெய் போன்ற பொருட்கள் மூட்டுகளுக்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றன.
உடல் பருமன் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, முதலில் பசியை நேர்படுத்தி குடலை சுத்தமாக்கிய பின்னரே, வராதி கஷாயம் போன்ற மருந்துகள் மூலம் உடல் எடை குறைக்கப்படுகிறது.
நல்லெண்ணெய் மனிதர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என ஆயுர்வேதம் கூறுகிறது. இது ஊடுருவும் தன்மை, தோல் மற்றும் கண்பார்வைக்கு வலுவூட்டும் குணம் கொண்டது. இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்து குளிப்பதால் உடல் மெலிந்தவர் பருக்கவும், உள் உபயோகத்தால் பருத்தவர் இளைக்கவும் நல்லெண்ணெய் உதவுகிறது. மேலும், இது மலத்தை இறுக்கி, குடற் கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது.