Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறட்டை அதிகமாக வந்தால் அது இதய நோயின் அறிகுறியா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
குறட்டை

Mahendran

, செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (18:04 IST)
இந்தியாவில் 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள குறட்டை பிரச்சனை, சாதாரணமாக தெரியலாம். ஆனால், இது ஸ்லீப் அப்னியா என்ற மூச்சு தடைபடும் தீவிர நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 
 
தூங்கும்போது நாக்கு மற்றும் தொண்டை தசைகள் தளர்வடைவதால், சுவாசம் செல்லும் பாதையில் சுருக்கம் ஏற்படுகிறது. காற்று செல்ல முயலும்போது, திசுக்கள் அதிர்வுற்று சத்தம் உண்டாகிறது. இதனால் இரவில் ஆக்சிஜன் சப்ளை குறைகிறது, சிலருக்கு சில நொடிகள் மூச்சே நின்று திடுக்கிட்டு எழும் நிலை ஏற்படுகிறது. இது தூக்கத்தை கடுமையாகப் பாதிக்கிறது.
 
தொடர்ந்து தூக்கம் கெட்டால், தலைவலி, ஞாபக மறதி, ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்தப் பிரச்சினை நீடித்தால், மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
குறட்டைக்கான காரணத்தைக் கண்டறிய 'ஸ்லீப் ஸ்டடி' பரிசோதனை அவசியம். இதில், தூங்கும்போது இதயம், மூளை செயல்பாடு மற்றும் மூச்சு நிறுத்தம் போன்ற விவரங்கள் கண்காணிக்கப்படும். அதன் அடிப்படையில், தேவைப்பட்டால் சீ-பாப் (CPAP) இயந்திரம் மூலம் சீரான அழுத்தத்தில் ஆக்சிஜன் செலுத்திச் சிகிச்சை அளிக்கப்படும். இது சுவாசத் தடையை நீக்கி, 3 மாதங்களில் குறட்டையைப் போக்க உதவும்.
 
எனவே, குறட்டைச் சத்தத்தில் மாற்றம் தெரிந்தால், உடனடியாக நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவரை அணுகுவது நல்லது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உலக இதய தினம்.. இதயமும் அதன் பணிகளும்