பொதுவாக ஊறுகாயில் உப்பு அதிகம் இருக்கும் என்பதால் சோடியம் அதிகம் இருக்கும் ஊறுகாயை நார்மலாக உள்ளவர்களே அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறப்படுவது ஒன்று. அந்த வகையில் சோடியம் அதிகம் இருக்கும் ஊறுகாயை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எப்போதாவது சிலமுறை எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஊறுகாய் கருவாடு வற்றல் ஆகியவை உப்பு அதிகம் இருக்கும் உணவு என்பதால் மிகக் குறைந்த அளவு தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சர்க்கரை நோயாளிகள் இதை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஊறுகாயில் அதிக சோடியம் இருப்பதால் எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேறச் செய்து எலும்புரை நோயை ஏற்படுத்தி விடும் என்றும் அதனால் சர்க்கரை நோயாளிகள் மட்டுமின்றி அனைவருமே ஊறுகாயை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது