வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் தினமும் உணவில் வெந்தயத்தை சேர்க்க வேண்டும் என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு சீராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் வெந்தயம் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் என்றும் வெந்தயத்தை வறுத்து அதில் சோம்பு உப்பு சேர்த்து மோரில் கரைத்துக் குடித்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக நிற்கும் என்றும் கூறப்படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றும் வெந்தயம் தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.
மேலும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் பருக்கள் குறையும் என்றும் முகம் பொலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.