Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகங்கள் உடையாமல் பாதுகாக்க உதவும் அற்புத அழகு குறிப்புகள் !!

Webdunia
நாம் அழகு நிலையம் சென்று என்னதான் மெனிக்கியூர், பெடிக்கியூர் என நகங்களுக்கு ஸ்பெஷல் அக்கறை எடுத்தாலும் ஏதாவது ஒரு வகையில் பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்த நகம்  சட்டென்று உடைந்துவிடும்.
 

கால்ஷியமும் புரோட்டீனும் அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்ளவது நகங்களுக்கு சிறந்தது.இந்த சத்துக்கள் கிடைப்பதற்கு முட்டையை தினமும் உணவில் எடுத்து கொள்ளுவது நல்லது. அயன் மற்றும் ஜிங்க் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும் அதாவது பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் உடைந்த நகம் கூட நன்கு வளரும். 
 
விட்டமின் ஏ மற்றும் பயோட்டீன்(விட்டமின் பி) நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளவது நகங்களுக்கு பலத்தை பெருக்கும். கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி சேர்த்து கொள்ளுங்கள்.
 
சியா விதைகள், சம்சா விதைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான நகங்கள் கிடைக்கும் இவை துணை புரியும். வெதுவெதுப்பாக ஆலிவ் ஆயிலை சூடாக்கி நகங்களில் வாரம் ஒரு முறை மசாஜ் செய்து வந்தால் நகங்களை உடையாமல் பாதுகாக்கலாம். பாதாம் எண்ணெய்யை இரண்டு சொட்டு நகத்தில் தேய்த்து வந்தால் இயற்கை முறையில் ஆரோக்கியமான பலப்பலப்பான நகம் வளரும்.
 
கைகள் ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்வதை தவிர்க்கவேண்டும். தரமான நெய்ல் பாலிஷ்களை மட்டுமே யன்படுத்தலாம். நெய்ல் பாலிஷ் ரிமுவரை அடிக்கடி பயன்படுத்துவது நகரங்களுக்கு தீங்கு விளைவிக்கும். நெய்ல் பாலிஷ் ரிமுவர் உடன் சிறிது கிளிசரின் சேர்த்து உபயோக்கிப்பது நல்லது.
 
ஆயில் மசாஜ் நகங்களுக்கு மிகவும் நல்லது. ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை எடுத்து லேசாகச் சூடுபடுத்திக்கொள்ள வேண்டும். அதை ஒவ்வொரு நகத்தின் வேர்ப் பகுதியிலும் விட்டு மசாஜ் பண்ண வேண்டும்.

ஒவ்வொரு விரலுக்கும் இருபது விநாடிகள் மசாஜ் கொடுத்தால் போதும். மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்துக் கைகளைக்கழுவிக் கொள்ளவும். இதனால் நகங்கள் ஆரோக்கியமாக வளர்வதுடன் நகங்களைச் சுற்றியுள்ள க்யூட்டிகிள் பிளவுபடாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments