Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறண்ட சருமத்தை சரிசெய்யும் அற்புத இயற்கை குறிப்புகள்...!!

Webdunia
உங்கள் சருமத்தை மென்மையாக்கி, உலர் சருமத்தைத் தடுக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பாதி அவகாடோ எடுத்துக்கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். பின் இந்த கலவையை முகத்தில் தடவிக்கொண்டு 20 நிமிடங்கள் உலர வைக்கவும். இது சருமத்தை  மாய்ஸ்சரைஸ் செய்து மின்ன வைக்கும்.
 
 
சூரிய ஒளி பாதிப்பு அல்லது சருமத்தில் வெடிப்பு இருந்தால் ஆலோவேரா ஜெல்லைப் பயன்படுத்தலாம். முகத்தை சூடான நீரில் அல்லாமல் வெதுவெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளவும்.
 
நிறைய தண்ணீர் குடிக்கவும். நிறைய தண்ணீர் குடிப்பது அதிகமாக வியர்வை வெளியேற வைத்து சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும். வாரத்திற்கு இரண்டு முறையேனும் மீன் சாப்பிடுவது உலர் சருமத்தை குணமாக்கும். மீனில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட் உங்கள்  சருமத்தை ஆரோக்கியமாக்கும்.
 
எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசிக்கொண்டு, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும். இதுவும் உலர் சருமத்தை  குணமாக்குவதை உணரலாம்.
 
வெள்ளரிக்காயைச் சிறு துண்டுகளாக்கிக்கொண்டு, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அடுத்ததாக கொஞ்சம் ஆலோவேரா ஜெல் அல்லது  யோகர்ட் வேண்டும். இதையும் நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவிக்கொள்ளவும்.
 
இரண்டு முட்டைகளை எடுத்து மஞ்சள் கருவை தனியே பிரிக்கவும். மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதை கலந்து முகத்தில்  பூசிக்கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவிக்கொள்ளவும்.
 
உங்களுக்கு உலர் சருமம் என்றால், நீங்கள் வாழைப்பழ பேஷியல் பயன்படுத்தலாம். ஸ்பூன் கொண்டு இரண்டு வாழைப்பழங்களை நன்றாக மசித்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துமுகத்தில் பூசிக்கொண்டு 20 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் முகம்  கழுவிக்கொள்ளவும்.  
 
கோகோ பட்டரை சூடாக்கி உங்கள் உள்ளங்கையில் வைத்திருக்கவும். பின்னர் அதை முகத்தில் மெல்ல பூசிக்கொள்ளவும். இரவு முழுவதும்  அப்படியே இருக்கட்டும். இது உலர் சருமத்தை உடனே குணமாக்கும். 
 
5 ஸ்பூன் தேன், 5 ஸ்பூன் தூள் மற்றும் 2 ஸ்பூன் மாவு கொண்டு சாக்லெட் பேக்கும் செய்து பயன்படுத்தலாம். இந்த கலவையை முகத்தில்  பூசிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிக்கொள்ளவும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments