Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க இதை செய்தாலே போதும்...!!

Webdunia
கொத்தமல்லி இலையானது உணவுக்கு நறுமனத்தையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருவதோடு மட்டுமல்லாமல் உங்களது சருமத்திற்கு அழகையும்  கொடுக்கிறது. 

கொத்தமல்லி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் விரைவாக  மறைந்துவிடும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.
 
எலுமிச்சை சாறுடன் சிறிதளவு சர்க்கரையை கலந்து முகத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்குவதோடு, முகம் பளபளப்பாக இருக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் நீங்கும்.
 
ஓட்ஸ் முகத்திற்கு மிகவும் சிறந்த ஒரு பொருளாகும். ஓட்ஸை தூள் செய்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து, முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
 
தயிர் மற்றும் எலுமிச்சை இரண்டுமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
 
தக்காளியை பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவிக் கொள்ளுங்கள். இவ்வாறு  செய்வதினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதோடு, முகம் பளிச்சென மாறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments