இயற்கையாகவே வீட்டில் இருக்கக் கூடிய எளிமையான பொருட்களை வைத்து முடியை அதிக அளவில் வளர செய்யலாம். வெந்தயம் முடியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைத்து முடியை மிக வேகமாக வளர செய்யும்.
ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் நீங்கள் சாப்பிடலாம். தொடர்ந்து இதைச் செய்து வரும் பொழுது உங்களுடைய முடி மிக வேகமாக வளர ஆரம்பிக்கும்.
வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இது தேவையான அளவு புரதத்தையும் கொடுக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சேர்ந்து முடி தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு முடி வளர்ச்சியையும் மிக வேகமாக அதிகரிக்கும்.
பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியான ஸ்கால்ப் இருந்தால், அதனைப் போக்குவதற்கு வெந்தயப் பொடியில், தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, கூந்தலுக்கு தடவ வேண்டும். வெந்தயப் பொடியில் பால் சேர்த்து கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பிற்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.
வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்தால், பொடுகுத் தொல்லை மற்றும் வறட்சியைத் தவிர்க்கலாம். மேலும் இந்த முறை கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.
கொதிக்கும் நீரில் வெந்தயத்தைப் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு கூந்தலை அலசி, 10 நிமிடம் ஊற வைத்தால், கூந்தல் உதிர்தல் நின்று, நன்கு வலிமையோடு வளரும்.