Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள் !!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (10:01 IST)
சரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள். வீட்டில் எப்போதும் கஸ்தூரி மஞ்சள் பொடி வைத்துக்கொள்வது நல்லது.


சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், வெறும் மஞ்சள் மட்டும் பூசாமல், இதனுடன் பால், தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீர் கலந்து உபயோகித்தால் நல்லது.

கஸ்தூரி மஞ்சளை எலுமிச்சை சாறு, முல்தானிமட்டி, வேப்பிலை விழுது, துளசி விழுது, கடலைமாவு, பைத்தம்மாவு, கசக்கசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், தக்காளி என எவற்றோடும் சேர்த்து பயன்படுத்தலாம்.

கஸ்தூரி மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும், பருக்கள் வராது. தொடர்ந்து செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும். பரு, சூடுக்கட்டிகள், காயங்களை குணப்படுத்தும்.

கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியான நேரத்தில் சரியான உணவுகள்.. உடல்நலனை மேம்படுத்த சில டிப்ஸ்..!

குழந்தைகளை மண்ணில் விளையாட விடுங்கள்.. ஆரோக்கிய டிப்ஸ்..!

ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமா? அதிர்ச்சி தகவல்..!

ஆரோக்கியத்தை கெடுக்கும் இன்றைய பழக்க வழக்கங்கள்.. முக்கிய தகவல்கள்

சிறுநீரில் வெள்ளை நிற நுரை இருந்தால் ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments