நகங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்துகொள்ளலாம். இதனால், நகங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம்.
உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன கெரட்டின் என்னும் உடல் கழிவுதான் நகமாக வளர்கிறது.
நாத்தில் மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று, இரு முக்கிய பாகங்கள் உண்டு. இதில் மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் இதயத் பகுதியைப் போன்றது. இதுதான் நக செல்கள் வளரக் காரணமாக இருக்கின்றது.
பொதுவாக நகங்கள் இளன்சிவப்பு நிறத்தில் இருக்கும். நிறம் மாறுபடும் பட்சத்தில் நோய் அறிகுறிகளை அறியலாம். ஈரல் பாதிக்கப் பட்டிருந்தால், நகங்கள் வெண்மையாக இருக்கும்.
சிறுநீரக் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இதய நோயால் பதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏறப்ட்டு, நல்ல ரத்தமும் கெட்ட ரத்தமும் கலந்திருந்தால், நகங்கள் நீல நிறத்தில் காணப்படும். நாள்பட்ட நுரையீரல், இதயநோய் உள்ளவர்களுக்கு, நகங்கள் வளைந்து இருக்கும். ரத்த சோகை ஏற்பட்டு, இரும்புச் சத்து குறைவாக இருப்பதால், நகங்கள் வெளுத்துக் குழியாக இருக்கும்.
சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச் சத்து குறைவாகவும் இருந்தால், நகங்களில் வெண்திட்டுகள் காணப்படும். மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாகக் காட்டும்.
நகங்களின் நுனிப் பகுதிகளை முழுமையாக வெட்டக்கூடாது. அப்படி வெட்டினால், நகத்தை மூடிய சதை வளர்ந்து, அதிக வலியினை ஏற்படுத்தும்.
நகத்தினை பற்களால் கடிக்கக்கூடாது. இதனல் உடைந்துபோக அதிக வாய்ப்புகள் உள்ளன. சாப்பிட்டபின்பு, கைகளைக் கழுவும்போது நகங்களையும், சுத்தம் செய்யவேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிர்களால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உண்டாகும்.
நகங்கள் பளபளப்பாக இருக்கவேண்டுமெனில் காய் கனிகளை உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரால், கை மற்றும் கால் நகங்களை சுத்தமாகக் கழுவிக்கொள்ளவேண்டும்.