வெள்ளை முடியை குறைக்க எடுத்துகொள்ள வேண்டிய உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின் பி 12 குறைபாட்டால் நீங்கள் நரைமுடி பெற்றிருந்தால் கடல் உணவுகள், இறைச்சி, முட்டை போன்றவற்றை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்.
பால் மற்றும் சீஸ் போன்றவை நல்ல ஆதாரங்கள் ஆகும். சைவ உணவை எடுத்துகொள்பவர்கள் மருத்துவரை அணுகிய பிறகு வைட்டமின் பி 12 உணவுகளை தேர்வு செய்யலாம்.
பெர்ரி வகைகள், திராட்சை, பச்சை இலை கொண்ட காய்கறிகள், க்ரின் டீ போன்ற ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். பெர்ரி பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. இறைச்சிகல் இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகளை எதிர்த்து போராடுகிறது.
கேரட் வைட்டமின் ஏ நிறைந்திருக்கும் கறிவேப்பிலை - வைட்டமின்கள் பி மற்றும் செலினியம், அயோடின், துத்தநாகம் மற்றும் இரும்பு தாதுக்கள் நிறைந்தவை.
கீரைகள் மெலனின் உற்பத்திக்கு உதவுபவை. முட்டை வைட்டமின் பி 12 நிறைந்திருக்கும். பீன்ஸ் வகைகள் புரதத்தின் வளமான ஆதாரமாகும். சூரியகாந்தி விதைகள் ஆகிஸ்ஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. அக்ரூட் பருப்புகள் - தாமிரத்தின் வளரமான ஆதாரம் இதுவும் மெலனின் உற்பத்திக்கு உதவுகிறது.