ரோஸ் வாட்டரைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் முகத்தை சுத்தப்படுத்தலாம்.
ரோஸ் வாட்டர் எனும் பன்னீரின் நறுமணத்தை எல்லோரும் விரும்புவார்கள். ரோஜா இதழ்களில் இருந்து நறுமணம் வீசும் சென்ட்டை வாலை வடித்தல் முறையில் பிரித்து எடுத்து நீரில் கரைத்த ஏரோசால் கலவை தான் ரோஸ் வாட்டர்.
தோலின் pH சமன்படுத்துகிறதோடு தோலில் சுரக்கும் எண்ணெய் சுரப்பிகளை ஒழுங்கு படுத்தி எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. ரோஸ் வாட்டரானது தோல் அரிப்பு, எக்ஸிமா, சிவந்த புண்களுக்கு தடவும் போது நல்ல பலன் அளிக்கிறது.
முகப்பூச்சு க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள், சேவிங் க்ரீம்களில் இதன் நறுமணத்திற்க்காக சேர்க்கின்றனர். புத்துணர்வும், ஆழ்ந்த உறக்கத்திற்க்காகவும் ரோஸ் வாட்டர் பயன்படுகிறது.
முகத்தில் உள்ள வெயிலின் தாக்கத்தால் விளைந்த கருமையை நீக்குகிறது. சருமதுளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்துக்கு பளபளப்பையும், புத்துணர்ச்சியையும் தருகிறது.
வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.
ரோஸ் வாட்டரில் சிறிது சூடத்தைப் போட்டு, அதனைக் கொண்டு நாள் முழுவதும் பலமுறை சருமத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.