Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த சருமமாக இருந்தாலும் பயன்தரும் எளிய அழகு குறிப்புகள் !!

Webdunia
எந்த சருமமாக இருந்தாலும் வெளியே சென்று வந்ததும் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். வெளியே சுற்றுப்புறத்தில் உள்ள அழுக்கு சருமத்தில் படிந்து  சருமத்தில் உள்ள நுண்துவாரங்களை அடைத்துவிடும். 

இதை சுத்தம் செய்ய காய்ச்சாத பச்சைப் பாலை பஞ்சில் நனைத்து முகத்தை நன்கு துடைக்க வேண்டும். பிறகு, 10 நிமிடங்கள் கழித்துத் தண்ணீர் கொண்டு லேசாக  மசாஜ் செய்து, கழுவ வேண்டும். இப்படி செய்தால் சருமம் பளபளப்பாகும். எலாஸ்டிசிட்டி மேம்படும்.
 
எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் தேன் மூன்றையும் நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் மசாஜ் செய்து கழுவ வேண்டும். சாதாரண சருமத்தினர் இதைப் பின்பற்றலாம். 
 
சாதாரண சருமத்தினர் கை, கழுத்து மற்றும் உடலில் சூரியனால் ஏற்படும் கறுமையைப் போக்க முல்தாணிமெட்டி, டீ டிகாக்ஷன் கலந்து 10 நிமிடங்கள்  வைத்துவிட்டுக் கழுவினால், வெயிலினால் ஏற்படும் கறுமை நீங்கும்.
 
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை முதலில் நன்கு சுத்தம் செய்து கழுவ வேண்டும். பிறகு, முல்தானி மெட்டியுடன், சிறிது பன்னீர் கலந்து பேக் போல் முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு காய்ந்ததும், தண்ணீர் தொட்டு மசாஜ் செய்து கழுவலாம். இதனை வாரம் ஒரு முறைதான் செய்ய வேண்டும்.
 
வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் காய்ச்சாத பாலைக் கொண்டு முகத்தைச் சுத்தம் செய்யலாம். அதன் பிறகு பாதாம், கொஞ்சம் காய்ச்சிய பால், சேர்த்து  மிக்ஸியில் பேஸ்ட்  மாதிரி அரைக்கவும். இதை பேக்காக முகத்தில் போட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். சருமம் வறண்டுபோகாமலும், சுருக்கம் ஏற்படாமலும் இருக்க இது உதவும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments