Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்கி மென்மையாக்கும் குறிப்புக்கள் !!

Webdunia
நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். நல்ல ஷேப் கிடைக்கும். வெட்டும் போதும் சுலபமாக இருக்கும்.

கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர கருவளையங்கள் மறையும். காலை அல்ல மாலை வேளையில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம்.
 
தலைக்கு குளிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணெய்யில் கருவேப்பிள்ளை, செம்பருத்தி இலைகள் சிலவற்றை போட்டு சூடானதும் இறக்கி வைக்கவும். பின் வெதுவெதுப்பாக இருக்கும் போது நன்றாக தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்ய வேண்டும். இதனால் முடி நல்ல பளபளப்பாக இருக்கும்.
 
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் மாறும்.
 
தோல் சுருக்கம் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் நன்றாக தடவி , சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிக்கலாம். தொடர்ந்த் ஒரு மாதம் செய்தால் தோல் சுருக்கம் மாறும்.
 
பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென மாறும்.
 
வெண்ணெய்யுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
 
பூசு மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும். தினமும் இதை செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments