Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தில் உள்ள கருமையை போக்கி நல்ல நிறத்தை கொடுக்கும் தக்காளி; எப்படி...?

Webdunia
தக்காளிப் பழத்தை பயன்படுத்தி, சரும பிரச்சனைகளை சரிசெய்து முகத்தையும் ஜொலிக்க வைத்து விடலாம். தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமைனவராக மாற்றி விடும்.

நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம்  சூரியனாகப் பிரகாசிக்கும்.
 
மென்மைத்தன்மையற்ற சருமத்திற்கு, ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கி இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்துக்குப் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் ஜொலிக்கும்.
 
சில பெண்களுக்கு கண்ணுக்கு கீழ் கருவளையம் இருக்கும். இதனை போக்க ஒரு வெள்ளரித்துண்டு அரை தக்காளி இரண்டையும் அரைத்து இமைகளின் மேல் இந்த  கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று 
இருக்கும்.
 
தக்காளி சாறு அரை டீஸ்பூன் தேன்அரை டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
 
முகத்தில் ஏற்படும் கருமையை போக்க, தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில்  கழுவுங்கள்.
 
பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
 
தக்காளி குளிர்ச்சியானது. இதனுடன் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments