சருமத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்கு நிறைய முகப்பருக்கள் இருக்கும், ஒரு சிலருக்கு நிறைய கரும்புள்ளிகள் இருக்கும், ஒரு சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகமாக வடியும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும்.
தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.
தக்காளியில் இயற்கையாகவே வைட்டமின் A, வைட்டமின் B, உள்ளது. இந்த வைட்டமின்கள் தான் முகத்தில் முகப்பரு வரவிடாமல் தடுக்கிறது.
முகப்பரு உள்ளவர்கள் தக்காளியை அரை பகுதியாக அறுத்து அதில் மஞ்சளை சேர்த்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகப்பரு குறையும்.
வெயிலினால் ஏற்பட்ட முகக்கருமையை போக்குவதற்கு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு தக்காளி துண்டை எடுத்து முகத்தில் நன்றாக தேய்த்து 15 நிமிடங்கள் வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.
ஒரு சிலருக்கு முகத்தில் அதிக அளவு எண்ணெய் வலியும். இவர்கள் தினமும் இரண்டு வேலை தக்காளி துண்டில் சிறிது தேனை கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
இவ்வாறு ஒரு வாரம் செய்தால் முகத்தில் அதிக அளவு எண்ணெய் வலிவது குறையும். மேலும் முகம் பொலிவு அடைவது உங்களுக்கு தெரியும். ஏனென்றால் தேனில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் இருப்பதால் முகத்தில் உள்ள கருமையை நீக்கும்.