கர்ப்பிணிப் பெண்களுக்கான தினசரி உணவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பீட்ரூட்டைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். கர்ப்ப காலத்தில், பீட்ரூட்டை சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம், அல்லது இலை காய்கறிகளுடன் வேக வைத்தும் உட்கொள்ளலாம்.
எந்த நேரத்திலும் பெண்களுக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். குறிப்பாக கர்ப்ப காலத்தில், இது இன்னும் அவசியம். இரும்புச் சத்து இரத்தத்தின் ஹீமோகுளோபின் உள்ளடக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாறு குடிப்பது ஒரு பெண்ணுக்கு இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. பீட்ரூட்டில் வைட்டமின் “சி” உள்ளது. இந்த வைட்டமின் பீட்ரூட்டில் இருக்கும் இரும்பை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது.
இந்த சத்தான காய்கறி இரத்தத்தை சுத்திகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது பிறப்பால் ஏற்படக்கூடிய குறைபாடுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.
கருவுற்றிருக்கும் தாய் தன்னுடைய கர்ப்ப காலம் முழுவதும் இந்த சாற்றை உட்கொண்டால், அவள் நிச்சயமாக ஆரோக்கியமான மற்றும் வலிமையான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்வதற்கு முன்பு, ஒருவர் தங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் படி வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.