தினமும் செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு சரும நோய்கள், தொற்று நோய்க் கிருமிகள், சிறுநீரகக்கல், மலச்சிக்கல், கண் பிரச்சனைகள் ஆகிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
செவ்வாழைப் பழத்தில் இருக்கும் மக்னீசியம், விட்டமின்கள், நார்ச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமல்ல! நம்முடைய சருமத்திற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.
வாழைப் பழங்களில் அதிக சத்து கொண்டுள்ளது செவ்வாழை ஆகும். செவ்வாழையில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடென்ட், நார்சத்து, விட்டமின் சி ஆகியவை சரும நோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.
செவ்வாழைப்பழம் ஒன்றை எடுத்து அதை நன்கு பேஸ்ட் போல மிக்ஸியில் போட்டு அரைத்து, இரண்டு டீஸ்பூன் அளவிற்கு ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் காய்ச்சிய பசும் பால் 2 டீஸ்பூன், முல்தானி மட்டி அரை டீஸ்பூன் மற்றும் கடலை மாவு அரை டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி பின்னர் கழுத்து, கை, கால்களிலும் தடவி, 5 நிமிடம் வரை நீங்கள் தடவிய இடங்களில் கிளாக் வைஸ் மற்றும் ஆன்டி க்ளாக் வைஸ் அதாவது முன்னும் பின்னுமாக நன்கு மசாஜ் செய்யுங்கள். இந்த பேக் முகத்தில் ஸ்கிரப்பர் ஆக செயல்படும்.
இவ்வாறு செய்வதால் முகத்தில் இருக்கும் நுண் கிருமிகளும், தூசு மாசுகள், கரும்புள்ளிகள் அனைத்தும் வெளியேறி இறந்த செல்கள் நீங்கும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதனை வறண்ட சருமம் கொண்டவர்கள் வாரம் இரண்டிலிருந்து மூன்று முறை செய்து வர சருமம் பட்டுப் போல மென்மையாக மாறும்.
செவ்வாழை வறண்ட சருமம் கொண்டவர்கள் அதிகப்படியான வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வாழைப்பழத்தை இவ்வாறு அடிக்கடி பேஸ்ட் போல செய்து முக அழகை அதிகரிக்க செய்யலாம்.