Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலவகையான விரதங்களின் அற்புத பலன்கள் !!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (11:39 IST)
பொதுவாக விரதங்கள் நாம் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றே. ஆனால் எந்த விழாவின்போது விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.


சங்கடஹர சதுர்த்தி: தேவையற்று ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து மனதில் அமைதி நிலவும். விநாயக சதுர்த்தி: வாழ்வின் விக்னங்கள் அனைத்தும் தீர்ந்து விநாயகனின் பூரணமான அருள் கிட்டும்.

சரவண விரதம்: குடும்பத்தில் அனைவரிடமும் ஒற்றுமை பெருகி. ஆனந்தமும், சந்தோஷமும் கிட்டும். சஷ்டி விரதம்: மனதில் எண்ணிய காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேறும். புண்ணியம் தரும்.

வைகுண்ட ஏகாதசி: குடும்பத்தில் நிலவி வந்த வறுமைகள் அனைத்தும் நீங்கி, செல்வ வளம் கொழித்திடும். கோகுலாஷ்டமி விரதம்: மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

கௌரி விரதம்: குறையாத செல்வமும், நீண்ட ஆயுளும், நல் மனைவியும், குழந்தைகளும் கிடைக்கும். வரலெஷ்மி விரதம்: மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடும். திருமணமான தம்பதியரிடையே நல் ஒற்றுமை நிலவும்.

பிரதோஷ விரதம்: மன அமைதி கிடைத்திடும், நீண்ட நல் ஆயுள் அமைந்திடும். செல்வ வளம் பெருகிடும். மகா சிவராத்திரி: சிவ பெருமானின் அருள் கிடைக்கும், வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வைகாசி விசாகம்: நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தைச் செல்வம் கிடைக்க பெறுவர். நவராத்திரி விரதம்: மனநலம், நீண்ட நல் ஆயுள், குறையாத செல்வம் அனைத்தும் கிடைக்கப் பெறுவர்.

அமாவாசை விரதம்: பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணத்தால், அவர்களது ஆசிகள் அனைத்தும் கிடைக்கும். பௌர்ணமி விரதம்: வாழ்வில் ஏற்பட்ட அனைத்து கஷ்டங்களும் விலகி, சுகமான வாழ்வு அமையும்.

கார்த்திகை விரதம்: எல்லாவிதமான நன்மைகளும் வந்தடையும். முருகனின் பரிபூரண ஆசி கிடைக்கும். விரதத்தின் மகிமையினை புரிந்துகொண்டு விரதமிருந்தால் வளமும் நலமும் பெற முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறி காரியங்கள் நடந்து முடியும்!– இன்றைய ராசி பலன்கள்(11.11.2024)!

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்!– இன்றைய ராசி பலன்கள்(10.11.2024)!

சிவலிங்கத்தில் இருந்து தோன்றிய அபூர்வ நீரூற்று: திண்டுக்கல் அருகே பக்தர்கள் பரவசம்..

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி தேரோட்டம்.. விரதத்தை முடித்த முருகன் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments