பைரவருக்கு விரதம் இருந்தால் பல நூறு நன்மைகள் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து சிவன் கோவில்களிலும் பைரவர் இருப்பார் என்பதும் பைரவர் வழிபாடு செய்த பின்னர் தான் ஆலயத்தின் கதவை மூடுவார்கள் என்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
பைரவர் கூறிய வழிபாட்டுக்குரிய நேரம் என்பது நள்ளிரவு என்றும் இந்த அகால நேரத்தில்தான் பார்வதி பைரவி என்னும் பெயரில் நடனம் ஆடுகின்றார் என்றும் கூறப்படுகிறது.
பைரவர் வழிபாடு மிகப்பெரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்கும் என்றும் பைரவருக்கு விரதம் இருந்தால் ஏராளமான பலன்களை கிடைக்கும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.