கருடாழ்வாரை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும்.
சக்கரத்தாழ்வாருக்கு உரிய நட்சத்திரம் சித்திரை. ஆனி மாத சித்திரை நட்சத்திரம் சக்கரத்தாழ்வார் ஜென்ம ஜெயந்தித் திருநாள். மாதந்தோறும் வருகிற சித்திரை நட்சத்திர நன்னாளில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது.
கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார்.
பெருமாள் கருடனை `வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்' என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.