விரதம் இருப்பது பொதுவாக புனிதமாக கருதப்பட்டாலும் ஏகாதசி விரதத்தில் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்றும் இதனால் ஒவ்வொரு ஏகாதசி தினத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மாதம் இரண்டு ஏகாதசி என 24 ஏகாதசி வருகின்றன என்றும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு என்றும் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் விரதம் இருந்தால் ஒவ்வொரு பலன்களை பெறலாம் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாசி மாத ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதை அடுத்து இன்றைய நாளில் விரதம் இருந்தால் ஏராளமான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏகாதசி நாளில் பெருமாளை வணங்கி விரதம் இருந்தால் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
வாழ்வில் ஏற்றம் பெற்று சங்கடங்கள் இன்றி இன்பமாக வாழலாம் என்றும் காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை ஏகாதேசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது ஆன்றோர்களின் வாக்கு என்பது குறிப்பிடத்தக்கது.