Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா.. கொடியேற்றத்துடன் ஆரம்பம்..!

Advertiesment
tanjavur

Mahendran

, புதன், 30 ஏப்ரல் 2025 (19:45 IST)
தஞ்சை நகரத்தின் பெருமையாக திகழும், உலகளவில் புகழ்பெற்ற பெரிய கோவில், சிறந்த கட்டிடக் கலைக் காட்சியாக மாமன்னர் ராஜராஜ சோழனால் எழுப்பப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலை காணும் நோக்கில், தமிழ்நாட்டின் மூலை மூலையிலிருந்தும், பிற மாநிலங்கள் மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தினசரி வருகை தருகிறார்கள்.
 
பல அற்புதங்கள் கொண்ட இந்த கோவிலில், வருடந்தோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் 18 நாட்கள் கொண்ட திருவிழா மிகவும் சிறப்பாக நடத்தப்படும் மரபு உள்ளது. இவ்வருட விழா, கடந்த 23ஆம் தேதி கொடியேற்றம் மூலம் ஆரம்பமானது. விழா தொடங்கும் முன்னர், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் கொடிமரம் முன் எழுந்தருளினர். அதன் பின்னர், கொடிமரத்திற்கு அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னர், கொடி ஏற்றி மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 
விழா நாள்களில், காலை மற்றும் மாலை நேரங்களில், சுவாமியின் ஊர்வலம் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது சிறப்பாக அமைகின்றன. இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாகத் தேரோட்டம் வரும் மே மாதம் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
இதற்கான முன்னோட்ட நிகழ்வாக, இன்று (புதன்கிழமை) காலை, தஞ்சை மேல வீதியில் அமைந்துள்ள பெரிய கோவில் தேரில் பந்தக்கால் பதுக்கும் முகூர்த்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு முன்னர், தேருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின் பந்தக்கால் வெவ்வேறு மரியாதைகளுடன் பதைக்கப்பட்டது.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!