ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம்.
பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தி வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானதாகும்.
இந்த பெளர்ணமி ஒளிமயமான தினத்தில் அம்பிகைக்கும் பூஜைகள் செய்து வழிபாட்டால் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பெளர்ணமி நாளில் வீட்டிலும்,கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும்.
சத்யநாராயண பூஜை: ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று சந்திரன் பகவான் உதயம் ஆகும் நேரத்தில் இந்த பூஜை செய்வது சிறந்தது. சத்ய நாராயண பூஜை என்பது காக்கும் கடவுளான நாராயணனுக்கு செய்யப்படும் பூஜை ஆகும்.
பெருமாள் எடுத்த பல அவதாரங்களில், சத்ய நாராயண அவதாரமும் ஒன்று. திருமணம், வீடு, மனை வாங்கும் போது, திருவிழா என எல்லாவித நல்ல காரியத்திற்கு முன் இந்த சத்யநாராயண பூஜை நடத்தப்படுகின்றது. அனைத்திலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த பூஜை நடத்தப்படுகின்றது.