Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஆஞ்சநேயர் பற்றிய சில அரிய தகவல்கள் பற்றி பார்ப்போம் !!

Anjaneyar
, செவ்வாய், 11 அக்டோபர் 2022 (10:15 IST)
அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.


மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு.

மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன.

ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.

எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு.

ஆஞ்சநேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம்.

ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.  "ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.

Edited by Sasikala
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (11-10-2022)!