Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எல்லா காரிய தடைகளையும் அகற்றும் விநாயகர் வழிபாடு !!

Lord Ganesha
, புதன், 12 அக்டோபர் 2022 (10:00 IST)
புதன் கிழமை விநாய பெருமானுக்கு உகந்தது. விநாயகப் பெருமான் சிறந்த அதிர்ஷ்டங்களையும் இறைநிலையையும் வழங்கக்கூடியவர். இவர் பெரும் அறிவு, செல்வம், உடல் நலம், மகிழ்ச்சி, குழந்தை வரம் ஆகியவற்றைத் தரக் கூடியவர்.


விக்னேஷ்வரன் என்று அழைக்கப்படுகின்ற விநாயகப் பெருமான் பிரச்சனைகளையும், எல்லா காரியத் தடைகளையும் அகற்றுவார். ஒருவரிடம் இருக்கின்ற கெட்ட குணங்களை நீக்கி, மன அமைதியையும் நல்ல குணநலன்களையும் மனதுக்குள் தியானம் மற்றும் ஆன்மீகத் தன்மையையும் அதிகப்படுத்துவார்.

இந்து சமயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகப்பெருமானை வழிபட்டு ஆரம்பிப்பதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஏனெனில் செய்யும் வேலையில் வெற்றியில் முடிய வேண்டும் என்பது தான் அந்த காரணம். எந்த காரியமாக இருந்தாலும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால், அந்த காரியத்தின் மீது என்ன மாதிரியான தடைகள் வந்தாலும் அதை நீக்கி, வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

மனோதிடம் உடல் மற்றும் மன ரீதியான சோர்வையும் போக்கி உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கச் செய்வார். விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால், முக்திக்கு தடையாக இருக்கிற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அழியும்.

விநாயகப் பெருமான் விசாலமான அறிவையும் புத்திக் கூர்மையையும் கொடுப்பார். விநாயகருடைய அடையாளமாகக் கருதப்படுகிற யானையின் தலை என்பது பேரறிவினுடைய குறியீடாகக் கூறப்படுகிறது.

Edited by Sasikala
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (12-10-2022)!