Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

எல்லா தோஷங்களையும் நீக்கும் பிரதோஷ வழிபாடு !!

Pradosham
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (10:14 IST)
பிரதோஷ காலத்தில் சிவா லயத்துக்குச் சென்றாலே புண்ணியம் என்கின்றன சிவயோக நூல்கள். பிரதோஷம் என்பது அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்பும் பெளர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் வரக்கூடியது. திரயோதசி திதியில் வருவதுதான்.


செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புதமான வழிபாடு ஆகும். சிவாலயங்களில் சிவ வழிபாடு செய்வதால் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.

பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. செவ்வாய்க்கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷம் தோஷங்களையெல்லாம் விலக்கக்கூடியது.

செவ்வாய்ப் பிரதோஷத்தில், அருகில் உள்ள சிவாலயம் செல்லுங்கள். நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக் கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இதில் கலந்து கொண்டு மனதார வேண்டிக் கொள்ளுங்கள் இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை அல்லது பசும்பாலினை அபிஷேகத்திற்கு கொடுப்பதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.

இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணி வித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக் கூடிய தோஷங்கள், பிரம்ம ஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்  பட்டிருக்கிறது முடிந்தால், அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வழங்குவது பல நன்மைகளை வாரி வழங்கும். வில்வம் வழங்கலாம். நந்திதேவருக்கு அருகம்புல் சார்த்தி, வாழ்வில் வளமும் நலமும் பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷத்தின் சிறப்புக்கள் !!