Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இயேசுவின் உயிர்ப்பு - நாளை ஈஸ்டர் தினம்

இயேசுவின் உயிர்ப்பு - நாளை ஈஸ்டர் தினம்
, சனி, 8 ஏப்ரல் 2023 (20:43 IST)
கன்னி மரியாளுக்கு மகனாக இமானுவேல் என்ற பெயரில்  பூமியில் பிறந்து, இயேசுவாக அறியப்பட்டு,  மக்களின் பாவங்களுக்காக  சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம்  நாளில் உயிர்த்தெழுந்தது  ஈஸ்டர் தினம் என்று  கடைபிடிக்கப்படுகிறது.

Eastre- என்ற பழைய ஆங்கில வார்த்தையில் இருந்து ஈஸ்டர் என்ற வார்த்தை தோன்றியதாக கூறப்படுகிறது.

இது, வசந்த உத்தராயணத்தைக் கொண்டாடும் பேகன் பண்டிகையின் பெயராகும். இந்த விழா., ஜெர்மானிய தெய்வமான ஈஸட்ரேவை  நினைவுகூரும் விதமாகவும், மறுப்பிறப்புடன் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

கி.பி. 4 ஆம் நூற்றாண்டில்தான் கிரிஸ்தவ தேவாலங்களில் ஈஸ்டர் பண்டிகை விடுமுறை நாளாக அறிவிக்கப்படு, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால்  இயேசு உயிர்ந்தெழுந்த நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிரேக்க மொழியில் இதை பஸ்கா பண்டிகை என்று வழங்குகின்றனர். இயேசு பாடுகளை உணர வேண்டியும் நினைவுகூரவும் வேண்டி, கிறிஸ்தவ மக்கள் 30 நாட்கள் உபவாச மிருந்து இருப்பர் இதைத் தவக் காலம் என்று அழைப்பர். இந்த 40 நாட்களின் கடைசி வாரத்தை புனித வாரமாகவும், இயேசு கெத்சமனே தோட்டத்தில் ஜெயித்த நாளும், காட்டிக் கொடுக்கப்பட்ட நாளை பெரிய வியாழன் எனவும், கன்மலையில்  யூதமக்களால் பொய்குற்றம்சாட்டப்பட்ட இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி எனவும் அழைக்கின்றனர்.

இதையடுத்து, இயேசு  சிலுவையில் மரித்து, 3 ஆம் நாள் உயிர்த்தெழுந்ததாகக் கூறப்படும் நாளை ஈஸ்டர் என்று அழைக்கின்றனர். ஜெர்மானிய காலண்டரில்  ஈஸ்ட்ரே என்ற மாதம்  உள்ளதாகவும் கூறப்படுகிறது.


நாளை அனைத்து  தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை நிகழ்ச்சியையொட்டி, சிறப்பு ஆராதனை   நடைபெறவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவாலயங்களில் இன்று புனித வெள்ளி ஆராதனை !