Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனி பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் !!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (12:33 IST)
ஆகமங்களில், சனியினுடைய உருவம், உடை ஆகியவைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கரிய நிறமுடையவன். கரிய ஆடையை அணிபவன். ஒரு கால் முடவன். இருகரம் உடையவன். 

வலக்கரத்திலே தண்டமும், இடக்கரத்தில் வரதக் குறிப்பும் உடையவன். பத்மபீடத்தில் வீற்றிருப்பவன். அட்ச மாலையை கொண்டு எட்டு குதிரைகள் பூட்டிய இரும்பு ரதத்தில் பவனி வருபவன். 
 
சனிபகவானுக்கு இருவகை மந்திரங்கள் உரியது. ஒன்று வேதம். இதற்கு ரிஷியாக இருப்பவர் இளிமிளி. அந்த மந்திரத்தின் பெயர் உஷ்ணிக்  என்ற சந்தத்தில் அமைந்தது மற்றொரு மந்திரம் காயத்ரி சந்தசை கொண்டது. அதற்கு ரிஷி  மித்ரரிஷி. 
 
நவக்ரக ஆராதனம் என்னும் நூலில் சனி பகவான் வில்லைப்போல ஆசனத்தில் வீற்றிருப்பான். அழகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி  இருப்பான். நீல மேனி உடையவன். முடிதரித்தவன். சூலம், வில், வரதம், அபயம் கொண்டவன், மெல்ல நடப்பவன். கருஞ்சந்தனம் பூசுபவன்.  கருமலர், நீலமலர் மாலையை விரும்புகிறவன். 
 
கரு நிறக்குடை, கொடி கொண்டவன் என்று சனியை பற்றி  குறிப்பிட்டிருக்கிறது. சனிக்கு, அதிதேவதை யமன். வலப்பக்கத்தில் இவனை ஆவாகனம் செய்யவேண்டும். இடப்பக்கத்தில் ப்ரத்யாதி தேவதை யாகிய பிரஜாபதி இருப்பார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

64 ஆண்டுகளுக்கு பிறகு வரும் குபேர யோகம்! இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்?

இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன் சேர்க்கையால் நன்மை உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(06.11.2024)!

ஒரே உடலில் ராகு-கேது.. இந்த கோவிலுக்கு சென்றால் 100 வயது வரை வாழலாம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(04.11.2024)!

மனப்பிரச்சனை, பணப்பிரச்சனையா? இந்த கோவிலுக்கு சென்றால் சரியாகிவிடும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments