கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மகா சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் – பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி அலங்காரவல்லி உடனூறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சோமவார வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தயிர், அரிசிமாவு, கரும்புச்சாறு, இளநீர், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி உள்ளிட்ட தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி எம்பெருமான் நடுவே ஈஸ்வரனை தரிசித்து தோஷங்கள் விலக பிரதோஷத்தன்று சிவனை தரிசித்து சுவாமி தரிசனம் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்