Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகல செளபாக்கியங்களை அள்ளி தரும் ஆடி வெள்ளி

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (08:19 IST)
தெய்வீக மணம் கமழும் ஆடி மாதத்தை அம்பாள் மாதம் என்று சிறப்பித்து கூறுவார்கள். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.

 
ஆம், அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.  
திருக்கொயில்களில் முக்கியமாக அம்பிகை வீற்றிருக்கும் ஆலயங்களில் சிறப்பு மிக்க பூஜைகள், ஹோமங்கள், பால்குட உற்சவங்கள், பூச்சோரிதல், சந்தனக்காப்பு என விமர்சையாக நடைபெறுகின்றன. 
 
ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும். குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை.   
 
இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம்.  
 
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி  வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு முக்கிய நபர்களுடன் சந்திப்பு ஏற்படும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

கந்த சஷ்டி திருவிழா: தங்க கவசம், வைரவேல் உடன் காட்சியளித்த சுவாமிமலை முருகன்..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி: நீண்ட வரிசையில் பக்தர்கள்.. கடற்கரையில் பெருங்கூட்டம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும்!– இன்றைய ராசி பலன்கள்(07.11.2024)!

திருச்செந்தூரில் கந்த சஷ்டி: விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்