திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்கப்பட்டதை அடுத்து விஐபி தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவம் விழா சிறப்பாக நடைபெறும் என்பதும் நேற்று மாலை இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த பிரம்மோற்சவம் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டார். இதனை அடுத்து மாட வீதிகளில் ஏழுமலையான் பவனி வந்தார் என்பது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மோற்சவ விழா காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் விஐபி தரிசனம் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்