திருமலை ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற உள்ளது. முதல் மூன்று நாட்களுக்கு அதாவது டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய நாட்களில் ஆன்லைனில் டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த மூன்று நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்களுக்கு மொத்தம் 24,05,237 பக்தர்கள் விண்ணப்பித்துள்ளனர். நவம்பர் 27 அன்று தொடங்கிய முன்பதிவு டிசம்பர் 1 மாலை நிறைவடைந்தது.
இன்று மதியம் 2 மணிக்கு ஆன்லைன் குலுக்கல் முறையில் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 1,76,000 டோக்கன்கள் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும்.
டோக்கன் பெறாத பக்தர்கள், மீதமுள்ள ஏழு நாட்களுக்கு அதாவது ஜனவரி 2 முதல் 8 வரை நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ரூ. 1,000, ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் ஸ்ரீவாணி டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.