சுப காரியங்களை வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகளிலும் செய்துக்கொள்ளலாம். வளர்பிறை விசேஷ திதிகள்: துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவையாகும். தேய்பிறையில் மங்கள காரியங்கள் செய்துக்கொள்ள ஏற்ற திதிகள்: துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள்.
நவமி திதி என்பது எதிரிகளால் ஏற்படக்கூடிய பயத்தினை போக்கும். இதில் கெட்ட விஷயங்களை நீக்கலாம். இந்த திதிக்கு அதிதேவதையாக அம்பிகை இருக்கிறாள்.
தசமி திதியில் எல்லா சுப காரியங்களும் செய்யலாம். மதச் சடங்குகள், ஆன்மிகப்பணிகள் செய்ய உகந்தது. வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம். வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.இந்தத் திதிக்கு எமன் அதிதேவதையாக உள்ளார்.
ஏகாதசியில் விரதம் இருப்பது மிகவும் விஷேசமாகும். திருமணம், சிகிச்சை, சிற்ப காரியம், தெய்வ காரியங்கள் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இதன் அதிதேவதை ருத்ரன்.
துவாதசியில் மதச்சடங்குகளை செய்துக்கொள்ள மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அதிதேவதை விஷ்ணு ஆவார்.
திரயோதசி திதியி;ல் சிவ வழிபாடு செய்வது, பயணம் மேற்கொள்வது, புது துணிகளை உடுத்துவது போன்ற செயல்களை செய்துக்கொள்ளலாம்.
சதுர்த்தசி திதியில் புதிய ஆயுதங்கள் செய்யவும், மந்திரங்களை கற்றுக்கொள்ளவும் மிகவும் சிறப்பானதாகும். இதன் அதிதேவதை காளி ஆவாள்.
பௌர்ணமி திதியில் விரதம், ஹோமம், சிற்ப, மங்கலமாக திடங்கும் எந்த விசயங்களையும் செய்துக்கொள்ளலாம். இதற்கு பராசக்தியே அதிதேவதையாக இருக்கிறாள்.
அமாவாசை திதியில் பித்ரு வழிபாடுகளை செய்வதோடு தர்ம காரியங்களை செய்ய ஏற்றதாகும். இதற்கு சிவனும், சக்தியும் அதிதேவதை ஆவார்கள்.