Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடுவது விசேஷமானது ஏன்...?

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:57 IST)
வெள்ளிக்கிழமையில் விரதம்  இருப்பது மிகவும் விசேஷமானது. தொடர்ந்து ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.

வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால்  அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். கடைகளில் பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கிறது. வெள்ளிக் கிழமைகளில் தாமரை திரி வைத்து அதில் விளக்கேற்றி வந்தால் குபேர  அருள் கிடைக்கும்.
 
வெள்ளிக் கிழமை சுக்கிர ஓலையில் தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும். வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீடை சுத்தம் செய்து சாம்பிராணி புகையை வீடு முழுக்க பிடிப்பதால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும்.
 
லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமையன்று உப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி  கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.
 
வெள்ளிக் கிழமைகளில் அரச மரத்தை 11 முறை சுற்றி வந்து அந்த மரத்தடியில் அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு 11 விளக்கு ஏற்றி வந்தால்  பண வரவு அதிகரிக்கும். ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் பொருள் ஆவி அனைத்தும் ஐயப்பனுக்கே.. தியாகம் செய்யும் பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு இழுபறி காரியங்கள் நடந்து முடியும்!– இன்றைய ராசி பலன்கள்(11.11.2024)!

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்!– இன்றைய ராசி பலன்கள்(10.11.2024)!

சிவலிங்கத்தில் இருந்து தோன்றிய அபூர்வ நீரூற்று: திண்டுக்கல் அருகே பக்தர்கள் பரவசம்..

அடுத்த கட்டுரையில்
Show comments