Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பெண்கள் சகல செளபாக்கியத்துடன் வாழ ஆடி அமாவாசையில் அம்மன் வழிபாடு!

பெண்கள் சகல செளபாக்கியத்துடன் வாழ ஆடி அமாவாசையில் அம்மன் வழிபாடு!
, ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (00:48 IST)
ஆடி அமாவாசைக்கு முந்தைய தினம் மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான  அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சகல செளபாக்கியத்துடன் வாழ்வார்கள்.

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக் கொள்ள அவன்  தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மெற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று அது சொல்லவே மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். ஒருநாள் காளி கோயில் ஒன்றில் அவன் வழிபட்டபோது, உன் மகன்  இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை. அவனது மனைவின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல்  கேட்டது.
 
இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடியபோது,  பெற்றோரை இழந்து கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை இறந்துபொன இளவரனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். விடிந்தபின் உண்மை தெரியவந்ததும் அழுதால். உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இறந்து கிடந்த இளவரசனை ஈசனின்  அனுமதியோடு உயிர்பெற்று எழச்செய்தாள்.
 
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேடியிடம் அந்தப் பெண், இருண்டு போன தன்  வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிப்படும் பெண்களுக்கும் அருள் புரிய வேண்டும் என்று  வேண்டினாள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த விரலால் விபூதியை தொடுவது நன்மை ?