கொரோனா காரணமாக பல மாதங்களாக மூடியிருந்த திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் உலகமெங்கும் ரிலீஸான ஹாலிவுட் படத்தை உள்ளூர் வசூலில் தோற்கடித்துள்ளது சீன படம் ஒன்று.
உலகம் முழுவதும் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் முதலாக சில நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஹாலிவுட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த கிறிஸ்டோபர் நோலனின் “டெனட்” திரைப்படம் உலகம் முழுவதும் 41 நாடுகளில் வெளியிடப்பட்டது.
முதல் வாரத்தில் டெனட் திரைப்படத்தின் உலக வசூல் 53 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கொரோனா காலத்தில் இந்தளவு வசூலானதே பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் உலக அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை டெனட்டிற்கு பதிலாக சீன படம் ஒன்று பெற்றுள்ளது.
சீனாவில் தயாராகி சீனாவில் உள்ள திரையரங்குகளில் மட்டுமே வெளியான “தி எயிட் ஹண்ட்ரட்” என்ற படத்தின் ஒரு வார வசூல் 79.6 மில்லியன், இரண்டாவது வாரத்தில் 69 மில்லியன் வசூல் செய்துள்ளது. உள் நாட்டில் மட்டுமே வெளியாகி உலகளவில் வெளியான ஹாலிவுட் படத்தின் வசூலை எயிட் ஹண்ட்ரட் உடைத்துள்ளது. இதனால் ப்ளாக் பஸ்டர் ஹிட் எதிர்பார்த்த நோலன் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.