Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'அவெஞ்சர்ஸ்' படக்குழுவையும் அலற வைத்த தமிழ் ராக்கர்ஸ்!

Advertiesment
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்
, புதன், 24 ஏப்ரல் 2019 (19:39 IST)
ஒரு திரைப்படம் தயாரித்து அதை வெளியிடுவதற்குள் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு போதும் போதும் என்றாகிவிடும். பல கஷ்டங்களை கடந்து ரிலீஸ் செய்தால், முதல் காட்சி முடிவதற்குள்ளேயே அந்த படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பாளரின் தலையில் இடியை இறக்கும். இந்த இணையதளத்தை முடக்க செய்யும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது
 
இந்த நிலையில் இதுவரை தமிழ்த்திரையுலகினர்களை கதற வைத்த தமிழ் ராக்கர்ஸ் அடுத்ததாக ஹாலிவுட் படக்குழுவினர்களையும் அலற வைத்துவிட்டது. நாளை மறுநாள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம் இன்றே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 'அவெஞ்சர்ஸ்' திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்
பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் வசூல் உலக அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளதாக செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இருப்பினும் இந்த படம் 3D படம் என்பதால் தியேட்டரில் சென்று பார்க்க என ஒரு பெருங்கூட்டம் என்பது ஒரு ஆறுதலான விஷயம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 63 யில் ஷாருக்கான் உறுதி? அதிலும் இப்படி ஒரு ரோல்!