Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வந்த ப்ளாக் மாண்டா! ஏழு ராஜ்ஜியங்களை காப்பாற்றுவானா அக்குவாமேன்? – அக்குவாமேன் 2 தமிழ் ட்ரெய்லர்!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (10:54 IST)
சூப்பர்ஹீரோ படமான டிசியின் அக்குவாமேன் 2ம் பாகத்தின் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி ட்ரெய்லர்களும் வெளியாகியுள்ளது.



ஹாலிவுட்டிலிருந்து ஆண்டுதோறும் ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் களமிறங்கி வருகின்றனர். அப்படியாக பிரபலமான டிசி காமிக்ஸ் கதாப்பாத்திரங்களை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் தொடர்ந்து படமாக எடுத்து வருகிறது. ஆனால் மார்வெல் போல இந்த படங்கள் ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸாக வெளியாவதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வந்தன.

இந்நிலையில் தற்போது இயக்குனர் ஜேம்ஸ் கன் தலைமையில் சினிமாட்டிக் யுனிவர்ஸை வார்னர் ப்ரதர்ஸ் தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் களமிறங்க உள்ள கடலின் மைந்தன் அக்குவாமேனின் இரண்டாம் பாக ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

கடலுக்குள் உள்ள நகரமான அட்லாண்டிஸை சேர்ந்த இளவரசிக்கும், ஒரு கலங்கரை விளக்க காவலனான சாதரண மனிதனுக்கும் பிறந்தவன்தான் ஆர்தர் கர்ரி. அக்குவாமேன் படத்தின் முதல் பாகத்தில் ஆர்தர் கர்ரி எப்படி அட்லாண்டிஸ் ராஜ்ஜியத்தின் மன்னனாகிறான் என்று காட்டப்பட்டிருந்தது.

இந்த இரண்டாம் பாகத்தில் முன்னதாக தன் தந்தை சாவிற்கு காரணமான அக்குவாமேனை பழிவாங்க ப்ளாக் மாண்டா திரும்ப வருகிறார். இந்த முறை ப்ளாக் மாண்டா அக்குவாமேன், அவனது குடும்பம், அவர்களது ராஜ்ஜியம் என அனைத்தையும் அழிக்கும் எண்ணத்தோடு வருகிறான். அவனிடமிருந்து கடல் ராஜ்ஜியங்களை காப்பாற்ற தனது சகோதரனான ஓஷன் மாஸ்டருடன் இணைந்து அக்குவாமேன் செய்யும் சகாசங்களே இந்த Aquaman and the lost kingdom.

இந்த படத்தின் கதையை ஜேம்ஸ் வான் எழுதி இயக்கியுள்ளார். அக்குவாமேனாக ஜேசன் மாமோ, ஓஷன் மாஸ்டராக பேட்ரிக் வில்சன், மேராவாக ஆம்பர் ஹெர்ட் நடித்துள்ளனர். இந்த படம் டிசம்பர் 21ல் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அதன் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி ட்ரெய்லர்களும் தற்போது வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments