Publish Date: Thu, 10 Mar 2022 (21:39 IST)
Updated Date: Thu, 10 Mar 2022 (21:41 IST)
கொள்ளையன் என நினைத்து பிரபல ஹாலிவுட் இயக்குனரை போலீசார் கைது செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரியான் கூக்லர் என்பவர் தலையில் தொப்பி கண்ணாடி அணிந்து வங்கி பணம் எடுக்கச் சென்றார்/ அப்போது அவர் கொள்ளையர் போல் இருப்பதாக சந்தேகித்தால் வங்கி அதிகாரி போலீசில் புகார் அளித்தார்
இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் வங்கியில் வைத்து அவரை கைது செய்தனர். அதன் பின்னர்தான் அவர் ஹாலிவுட் படமான பிளாக் பந்தர் படத்தின் இயக்குனர் என தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
கொள்ளையன் என நினைத்து ஹாலிவுட் இயக்குநர் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முற்றுப்புள்ளி