அமெரிக்காவின் ஆரம்பகால ஸ்டுடியோக்களில் ஒன்றான எம் ஜி எம் ஐ அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஹாலிவுட் படங்களின் தொடக்க காலத்தில் முடி சூடா மன்னனாக விளங்கிய ஸ்டுடியோக்களில் ஒன்று எம் ஜி எம். அதன் பின்னரே வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் போன்றவை வந்தன. இந்நிலையில் இப்போது அந்த எம் ஜி எம் ஸ்டுடியோவை அமேசான் ப்ரைம் நிறுவனம் 845 கோடி அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளதாம். எம் ஜி எம் நிறுவனம் 4,000 திரைப்படங்களையும், 17,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்துத் தன் வசம் வைத்துள்ளது.