பிரபல மார்வெல் சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரமான ஸ்பைடர்மேனின் பட ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சூப்பர்ஹீரோக்களில் முக்கியமானவர் ஸ்பைடர்மேன். ஸ்டான்லீ உருவாக்கிய இந்த காமிக்ஸ் கதாப்பாத்திரம் 2000களில் டோபி நடித்து படமாக வெளியாகி புகழ் பெற்றது. தொடர்ந்து பலரும் ஸ்பைடர்மேனாக நடித்துள்ள நிலையில், தற்போது மார்வெல் நிறுவனத்திற்காக டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேனாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே டாம் ஹாலண்ட் நடிப்பில் 3 ஸ்பைடர்மேன் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது Spiderman: Brand New Day 4வது பாகத்திற்கான ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இதற்கான ஒரு ஆக்ஷன் காட்சியை படமாக்கியபோது டாம் ஹாலண்டுக்கு தலையில் அடிப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டதுடன், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஒரு வாரக்காலம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K